ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியலில்இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.
அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) நாளை காலை 9 மணி முதலும், வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வரும் 4ம் தேதி மற்றும்5ம் தேதிகளில் காலை 9 மணி முதலும் இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில் கலந்தாய்வு நடக்கும் நாட்களில் கல்வி சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவு கடிதத்துடன் கலந்து கொள்ளவேண்டும்.
சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாளை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல், வேறு மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிநியமன ஆணையினை பெற்று கொள்ளலாம்.

Tags
TET News