இந்தாண்டு தமிழகத்தில் அதிகளவிலான பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள்!

சென்னை: தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை நோக்கி ஐ.டி. நிறுவனங்கள் செல்வது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட, 2 மடங்கு மாணவர்கள் அந்நிறுவனங்களால் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகள் சற்று மந்தமாக இருந்த நிலையில், இந்தாண்டு நிலைமை மாறியுள்ளது. ஐ.டி. நிறுவனங்களின் மூலம் பணி வாய்ப்புகளைப் பெற்றவர்கள், கடந்தாண்டைவிட, இந்தாண்டு, இரண்டு மடங்கு அதிகம்.
அவர்களுக்கான சம்பளம் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை இருக்கிறது.
வேலூரின் VIT கல்வி நிறுவனத்தில், 4 பன்னாட்டு நிறுவனங்களின் மூலம், மொத்தம் 5,828 மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில், இது 90% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 490 மாணவர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய அமைப்பு(NASSCOM), இந்த 2014-15ம் ஆண்டில் மட்டும், புதிய பட்டதாரிகளுக்கு, ஐ.டி. துறையில் சுமார் 30,000 பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
வேலூரின் VIT கல்வி நிறுவனத்தில் மட்டும், மொத்தம் 1,911 மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது Cognizant நிறுவனம். இதுவொரு அதிகபட்ச அளவாகும். தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலையில், கடந்த வாரம் 1,212 மாணவர்கள், TCS உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மூலம் பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.
பெரிய அளவிலான ஆளெடுப்பு பணிகள், முதல்நிலை கல்வி நிறுவனங்களில் தொடங்கியுள்ளது. அடுத்து, இரண்டாம் நிலை கல்லூரிகளை நோக்கி அது நகரவுள்ளது. முக்கியமான அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், செப்டம்பர் 3ம் வாரத்தில் ஆளெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றன.
ஊதியம் எவ்வளவு?
மேற்கூறிய கல்வி நிறுவன மாணவர்கள், பணி வாய்ப்புகளைப் பெற்றாலும், அவர்களின் ஊதியம், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பெறும் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. இவர்களின் சராசரி ஊதியம் பெரும்பாலும், ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரையிலேயே இருக்கிறது.
கடந்த 2013ம் ஆண்டில், ஐ.ஐ.டி., சென்னையில் பணி வாய்ப்பை பெற்ற ஒரு மாணவர் பெற்ற ஊதியம் ரூ.1 கோடிக்கும் மேல்!
இந்தாண்டு VIT -ல் ஒரு மாணவர் பெற்ற அதிகபட்ச ஊதியம் ரூ.23 லட்சம். அதேபோன்று, தஞ்சை சாஸ்த்ரா பல்கலை மாணவர் பெற்ற அதிகபட்ச சம்பளம் ரூ.17.25 லட்சம். ராஜலட்சுமி பொறியில் கல்லூரி மாணவருக்கான அதிகபட்ச சம்பளம் ரூ.7.50 லட்சம்.
பொதுவாகவே, பெரிய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பணிக்காக மாணவர்களை எதிர்பார்த்து பணியமர்த்துகின்றன. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாணவர்கள் கிடைக்கிறார்கள். எனவேதான், அவர்களுக்கு மிக அதிக சம்பளம் கிடைக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு பல்வேறு கல்லூரிகளில் வளாக நேர்காணலுக்கு வந்த சில முக்கிய நிறுவனங்கள்
Cognizant, TCS, Wipro, IBM, Accenture, Code Nation, Paypal, Ashok Leyland, Dell, Whirlpool, Amazon, TVS Motors, Microsoft, Avnet, Freshdesk, Lister, Flipkart and Deshaw etc...

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post