எம்பில் பட்டம் முடித்த தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தர வேண்டும்

உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்விஅதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.
வேதாரண்யத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமசாமி. இவர் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:மனுதாரர் ராமசாமி வேதாரண்யம் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் 2010ம் ஆண்டு பிஏ பிட் முடித்தார்.இதற்காக அவருக்கு முதல் ஊக்க ஊதிய உயர்வு தரப்பட்டது. அதன்பிறகுஎம்ஏ முடித்ததற்காக இரண்டாம் ஊக்க ஊதியம் தரப்பட்டது. 2009ல் எம்பில் பட்டம் படித்து முடித்தார். இதற்கு 3ம் ஊக்க ஊதிய உயர்வு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து 3ம் ஊக்க ஊதியம் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகள் அமல்ப டுத்தவில்லை. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி ஆஜராகி, ஏற்கனவே அதிகம் படித்த ஆசிரியர்களுக்கு 3ம், 4ம் ஊக்க ஊதியம் தரப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை கூறியது. எனவே மனுதாரருக்கு 3ம் ஊக்க ஊதியம் தர வேண்டும் என்றார்.இதை நீதிபதி சுப்பையா விசாரித்து, 2 வாரத்தில் தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை கல்வித்துறை செயலாளர் அமல்படுத்தி நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post