தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்படுத்தக்கோரிசென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது. 
தஞ்சையில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். 

வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன. இதனால் பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர்பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே பல பள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிப்புக்குள்ளாகிள்ளது. 

இதை முதல் வர் பரிசீலனை செய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில் பதிவுமூப்பு முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 2012ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post