இந்து சமய அறநிலைய, தடய அறிவியல் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்காணல் - தினமணி

இந்து சமய அறநிலையத் துறை, தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள உதவி ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகப் பணியில் அடங்கிய நான்கு உதவி ஆணையர் காலிப் பணியிடங்கள், செயல் அலுவலர் நிலையில் உள்ள 8 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.

தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி உள்ளிட்ட விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த ஜனவரி, மே மாதங்களில் வெளியிடப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நேர்காணலுக்கு தாற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 36 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய

இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்-இல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் வரும் 16 ஆம் தேதியன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய

நஇஐஉசபஐஊஐஇ அநநஐநபஅசப எதஅஈஉ-2 பதவிக்கான 33 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி நடத்தப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நேர்காணலுக்கு தாற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 69 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

நேர்காணல் வரும் 18, 19 ஆகிய நாள்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post