பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நாளை முதல் கலந்தாய்வு - தினமலர்


பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3) தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான

ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம்.

கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post