கலசலிங்கம் பல்கலை.யுடன் ஷேசசாயி பேப்பர்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

First Published : 13 September 2014 12:54 PM IST
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம், திருநெல்வேலியில் உள்ள ஷேசசாயி பேப்பர்ஸ் போர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஷேசசாயி பேப்பர்ஸ் போர்டு நிறுவனத்தின் தலைவர் வி.கிருஷ்ணன், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் ஆகியோர் துணை வேந்தர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சியில் கருவியல் மற்றும் கட்டுப்பாட்டுவியல் துறையின் தலைவர் டாக்டர் பி.கண்ணபிரான் வரவேற்றார்.
ஷேசசாயி பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் வி.கிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தின் பயனாக கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழிற்சாலை பயிற்சி, தொழிற்சாலை பார்வையிடுதல் மற்றும் புராஜக்ட் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மேலும் வேலை வாய்ப்பு பெற்றிட முக்கியத்துவம் தரப்படும்.
வளர்ந்து வரும் கணினித் துறையைப் போல, பேப்பர் உற்பத்தித் துறையும் மென்மேலும் வளரும். ஒட்டு மொத்த துறை சார்ந்த பெரிய நிறுவனங்கள் வளர்ச்சியானால்தான், கிளை நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் வளர்ச்சியடைய முடியும்.
பெரிய நிறுவனங்கள் வளர்ச்சிக்காக, துறை சார்ந்த தொழிற்சாலை வளர்ச்சிக்கு மாணவர்கள் புதிய யுக்திகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
ரயிலில் பெண் ஒருவர் செல்போனை தொலைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்தாராம். அவரது நம்பரோ, கணவரது நம்பரோ தெரியாமல், தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
இதே பெண், ஒரு டைரியில் அனைத்து நம்பர்களையும் குறிப்பெழுதி வைத்திருந்தால், அடுத்தவர்களுடையை செல்போனை பயன்படுத்தி பேசலாம். எனவே குறிப்பெழுதி வேலையை செய்து முடிக்க வேண்டும். ரிக்கார்டுகள் தான் நாம் கடந்து வந்த பாதையைக் காட்டும் என்றார் அவர். பேராசிரியர் சி.கார்த்திக் நன்றி கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post