மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க இயலாது என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் வேலை பறிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட 13,500 பேரும் தற்காலிக பணியாளர்கள் என்பதால் அவர்களை நிரந்தரம் செய்ய முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்குமாறு தமிழக அரசு மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Tags
Latest News