இடைத்தேர்தல் குறுக்கீடு; இரண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.

உள்ளாட்சி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2மாணவர்களுக்கான காலாண்டு தேர்வில் இரண்டு பாடங்களுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
கடந்த மாத இறுதியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. பிளஸ் 2 காலாண்டு செப்., 15ம் தேதி தமிழ் முதல் தாளுடன் துவங்கி, 16ம் தேதி - தமிழ் 2ம் தாள் , 17ம் தேதி -ஆங்கிலம் முதல் தாள், 18ம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

மற்ற பாடங்களுக்கான தேர்வு, 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.வரும் 17, 18ம் தேதிகளில் நடப்பதாக இருந்த ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் பாடங்களுக்கான தேர்வு, அக்., 7 மற்றும் 8 தேதிகளுக்கு மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு, வரும் 17ம் தேதி தமிழ் முதல் தாளுடன் துவங்கி, 18ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வு என்றும்,ஆங்கிலம் உள்ளிட்ட இதர பாடங்களுக்கு வரும் 25ம் தேதி வரை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதில், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடப்பதாக இருந்த தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்தேர்வு, அக்., 7 மற்றும் 8க்கு மாற்றப்பட்டு, பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி, காலாண்டு தேர்வு துவங்கும்; இடைத்தேர்தல் நடைபெறுவதால், 17, 18ம் தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும், விடுமுறைக்குபின் நடத்தப்படும். ஏனெனில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பல பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அதனால், அவ்விரண்டு நாட்களில் நடைபெற உள்ள தேர்வுகள்மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post