2021 முதல் இனி வருடத்துக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு: தேசிய தேர்வு முகமை இயக்குநர்


2021 ஆண்டிலிருந்து வருடத்துக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் JEE, NET, NEET, CMAT என கல்வி தொடர்பான அனைத்து பெரும்பாலான நுழைவுத்தேர்வுகள், தகுதித் தேர்வுகளையும் NTA எனப்படும் ‘தேசிய தேர்வு முகமை’ நடத்தி வருகிறது. இவற்றில் JEE, UGC NET போன்ற தேர்வுகள் ஒரு வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. முதல் காலாண்டில் ஒரு தேர்வும், இறுதி காலாண்டில் மற்றொரு தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
(நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்தரவு)

NEET 2021
இந்த நிலையில், நீட் தேர்வும் 2021 ஆம் ஆண்டு முதல் வருடத்துக்கு இரண்டு முறை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி கூறியிருப்பதாவது: ‘நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களிடத்தில் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில், பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும், நீட் தேர்வு வருடத்துக்கு இரண்டு முறை

NEET Twice a Year நடத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்று விரும்புகின்றனர்.

இந்த NEET 2021 NEET Twice a Year கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்துவதற்கான முதற்கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தப்பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2021 ஆம் ஆண்டு முதல், இரு முறை நீட் தேர்வு நடக்கலாம். இந்த புதிய முறையால், வரும் 2020 ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வு பாடத்திட்டத்திலோ, தேர்வு தேதிகளிலோ எந்த மாற்றமும் செய்யப்படாது. 2020 ஆண்டுக்கான நீட் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடியே நடைபெறும். இவ்வாறு தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி தெரிவித்துள்ளார்.

(நீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை தான் வில்லன்! நீதிமன்றம் கருத்து)

எதற்கு இரண்டு முறை நீட் தேர்வு?
இந்த அறிவிப்பால் இனி ஜேஇஇ, நெட் தேர்வு போல நீட் தேர்வும் வருடத்துக்கு இரண்டு முறை நடத்த வாய்ப்புகள் உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கு இனி நீட் தேர்வு மட்டும் தான் ஒரே வழியாக இருக்கும் என்று ஏற்கனவே மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தார். அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்குக் கூட நீட் தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஏதோ ஒரு காராணத்தினால், நீட் தேர்வு எழுத முடியாமல் போனால், திறமையுள்ள ஒரு மாணவர், மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ஒரு வருடம் காத்து கிடக்க வேண்டியாதாக உள்ளது. இந்த நிலையைப் போக்கும் வகையில், தான் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post