இஸ்ரோவில் 327 விஞ்ஞானி காலி இடங்கள் மற்றும் என்ஜினீயர் பணிக்கான காலி இடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் எலக்ட்ரிக் பிரிவில் 134, மெக்கானிக்கல் பிரிவில் 135, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 58 என மொத்தம் 327 விஞ்ஞானி காலி இடங்கள் மற்றும் என்ஜினீயர் பணிக்கான காலி இடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 4.11.2019-ந்தேதியுடன் 35 வயது நிறைவடைந்தவர் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உத்தரவுப்படி வயது தளர்வு செய்யப்படும்.
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி ஆகும். இந்த பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்து தேர்வு அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 12-ந்தேதி நடக்கும் என தெரிகிறது.
எழுத்து தேர்வை தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.56 ஆயிரத்து 100 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.