படிப்புகள்:ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சர், லைப் சயின்சஸ், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், சோசியல் சயின்சஸ் ஆகிய துறை படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்:இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும். அதனோடு, நிதியுதவி தேவைக்கான வேண்டுகோளையும் விடுத்திருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:எட்டு செமஸ்டர் வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்குரிய கல்விக்கட்டணம், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆர்க்கிடெக்சர் போன்ற எட்டு செமஸ்டர்களுக்கும் அதிகமான படிப்புகளை படிக்கும் மாணவர்கள், மீதமுள்ள செமஸ்டர்களுக்கான கல்விக் கட்டணத்தை அவர்களே ஏற்கவேண்டும். எனினும், தங்கும் செலவு, உணவு, மருத்துவ காப்பீடு, போக்குவரத்து செலவு ஆகியவை அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
உதவித்தொகை எண்ணிக்கை:மொத்தம் 20 இந்திய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் காலம்:பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் / நவம்பர் மாதங்களில் உரிய ஆவணங்களுடன், இந்த உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.
விபரங்களுக்கு:https://admissions.cornell.edu/apply/international-students/tata-scholarship