திருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்!

திருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்!

திருப்பூரில் செயல்பட்டு வரும் சைனிக் ராணுவப்பள்ளியில் உதவித்தொகையுடன் மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம

திருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கு...
திருப்பூரில் உள்ள சைனிக் ராணுவப்பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர் வருமானத்துக்கேற்ப 50 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து திருப்பூர் மாவட்டம் அமரவாதியில் சைனிக் ராணுவப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேரடியாக ராணுவத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நாடு முழுவதும் இதுபோல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் மொத்தம் 26 பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு 2020-21ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி நடைபெறும். இதில் கலந்து கொண்டு சைனிக் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ராணுவத்தில் பணிபுரியம் வாய்ப்புகள் உள்ளது.

மேலும், பெற்றோர்களின் வருமானத்துக்கு ஏற்ப தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பில் மொத்தம் 90 இடங்களும், 9ம் வகுப்பில் 6 இடங்களும் என மொத்தம் 96 இடங்கள் உள்ளது.

திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், http://www.sainikschoolamaravathinagar.edu.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் செப்டம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
http://www.sainikschoolamaravathinagar.edu.in/Applications/Admission_Notice_Tamil_2020.pdf
 
Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post