அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை!


தமிழக அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தொடக்கக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது

அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை!
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எல்கேஜி, யுகேஜி அடிப்படை வகுப்புகள் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், இந்தாண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சுமார் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் குறைந்தது 37 பயின்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் சேர்க்கையின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்க வைக்க இது ஏதுவாக அமைகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், நூறு நாள் வேலை திட்டத்துக்குச் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைகளை இதுவரையில் உறவினர்களிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும் ஒப்படைத்து விட்டுச் செல்லும் நிலைமை இருந்து வந்தது. இனி அவர்கள் நேரடியாக தங்கள் குழந்தைகளை் பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post