தேனி: தேனி பள்ளி மாணவர் தாழை அரசனுக்கு இஸ்ரோ இயக்குனர் சிவன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டதில் விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிரங்கவில்லை. இயக்குனர் சிவனுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
இதை டிவியில் பார்த்த தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் தாழைஅரசன் 14. இஸ்ரோ இயக்குனர் சிவனுக்கு செப். 28 ல் கடிதம் எழுதினார்.அதில் 9 ம் வகுப்பு தமிழ்பாடத்தில் சிறுவயதில் இருந்தே நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுவது நிராகரிக்கப்படும். அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வது போல் முடிவு சிறப்பாக அமையும். எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அதுபோல் விக்ரம் லேண்டர் பிரச்னைக்காக கவலைப்படாதீர்கள். நீங்கள் சிவன், உங்கள் தலை மீதே சந்திரன் உள்ளான். அதனால் அடுத்த திட்டத்தில் வெற்றி வசமாகும்.” என அதில் குறிப்பிட்டிருந்தார். இதை படித்த இயக்குனர் சிவன் மாணவருக்கு நன்றி தெரிவித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் தேனி மாணவருக்கு கடிதம்கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் அக். 19ல் மாணவருக்கு கிடைத்தது
Tags
ISRO NEWS