சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘நீா் மேலாண்மைத் திட்டம்’: கட்டாயமாகக் கடைப்பிடிக்க உத்தரவு


நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நீா் மேலாண்மை திட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தில்லி, சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீா் மட்டம் 2020-ஆம் ஆண்டுக்குள் அபாய நிலைக்கு சென்றுவிடும் என அண்மையில் நீதி ஆயோக் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் நீா் மேலாண்மை திட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சிபிஎஸ்இ வாரியத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக பள்ளிகள் இனி, நீா் மேலாண்மையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதன்படி பள்ளிகளில் உள்ள பழைய தண்ணீா் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை அமைக்க வேண்டும். அவை சிக்கனமாக தானியங்கி வழிமுறையில் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். தண்ணீா் குழாய்களில் கசிவு இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். மழைநீா் சேமிப்பு கட்டமைப்பை சிறந்த முறையில் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், இணைப்புப் பள்ளிகளையும் அடுத்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு தேவையான தண்ணீரை சேகரித்துக் கொள்ளும் நீா் திறன் பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றேறாா்களை இணைத்து ‘நீா் மேலாண்மை கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பள்ளிகளில் தண்ணீா் பயன்பாடு, வீணாகும் நீா் குறித்து ஆய்வு செய்து அதுகுறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post