மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேட் தேர்வுக்கான அறிவுப்புகளை ஐஐடி டெல்லி வெளியிட்டுள்ளது

GATE Entrance Test
பொறியியல் துறையில் இணைவதற்கு, பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர்க்கு கேட் நுழைவுத் தேர்வு என்பது மிக முக்கியமானதாகும். இந்தியாவில் முழுவதும் உள்ள ஏழு ஐஐடி நிறுவனங்கள் மற்றம்  முக்கிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இணைவதற்கு கேட் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

கேட் தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள்  ஐஐடி நிறுவனங்களில் மட்டுமன்றி பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவமும் முன்னுரிமை தர படுகிறது. வேலை வாய்ப்பில் கூட கேட் தேர்வு மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து மூன்று ஆண்டு வரை  மட்டுமே பயன்படுத்த முடியும்.

2020ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் விண்ணப்பிக்க வேண்டிய நாள், தேர்வு நடை பெறும் நாள், தேர்வுக்கான பாடப்பிரிவுகள்  போன்றவற்றை வெளியிட்டுள்ளது.

இத்தேர்வினை சென்னை, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்கீ ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.நடைபெற உள்ள  கேட் தேர்வில் 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.

வெளிநாடுகளில் ஆறு நகரங்களிலும் , இந்தியாவில் முக்கிய நகரங்களிலும் இத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. பொறியியல் துறையில் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவோ அல்லது ஆய்வுப் படிப்பில் சேரவோ இந்த தேர்வை எழுதலாம்.

GATE Exam

முக்கிய தேதிகள்

இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் - செப்டம்பர் 3, 2019
இணையதளத்தில்  விண்ணப்பிக்க கடைசி நாள் - செப்டம்பர் 24, 2019
இணையதளத்தில் விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் முடியும் நாள் - அக்டோபர் 1, 2019
தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நகரத்தை மாற்றும்படி கோர கடைசி நாள் - நவம்பர் 15, 2019
அட்மிட் கார்டு வெளியாகும் நாள் - ஜனவரி 3, 2020
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாட்கள் - பிப்ரவரி 1 & 2 2020 மற்றும் பிப்ரவரி 8 & 9, 2020
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் - மார்ச் 16, 2020

தகுதி

பொறியில், அறிவியல் துறை சார்ந்த பி.இ., பி.டெக்., பி. ஆர்க்., பி.எஸ்சி. (4 ஆண்டுகள் ஆகிய இளநிலை)  பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிரிவினர்

செப்டம்பர் 24, 2019 வரை

அக்டோபர் 1, 2019 வரை

எஸ்.சி/எஸ்.டி, பிரிவினராகவோ மாற்றுத்திறனாளியாகவோ பெண்களாகவோ

ரூ.750

ரூ.1,250

பொது பிரிவினர்

ரூ.2000

ரூ.1500

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா)

கொழுப்பு (இலங்கை)

டாக்கா (வங்கதேசம்)

 

50 அமெரிக்க டாலர்

70 அமெரிக்க டாலர்

துபாய் அல்லது சிங்கப்பூர்

100 அமெரிக்க டாலர் 

120 அமெரிக்க டாலர் 


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post