தமிழக மக்களுக்கு மீண்டும் ரூ.1000 பொங்கல் பரிசு.. முதல்வர் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்!

சென்னை: அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ரூ.1000 பொங்கல் பரிசினை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன்படி அரிசி கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

pongal gift rupees 1000  money will given to rice card holders: tn cm palanisamy

முன்னதாக கடந்த ஆண்டும் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 ரொக்க பணம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. அத்துடன் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, போன்றவையுடன வேட்டி சேலையும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டும் இதே போன்று ரூ.1000 ரொக்க பணம், அரிசி, கரும்பு, வேட்டி, சேலை, சர்க்கரை உள்பட பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

முன்னதாக சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசத்தை நீடித்தது அதாவது வரும் 29ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post