Updated: 27 Nov 2019, 06:07:51 PM
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் தினமும் காலையில் வகுப்பு ஆரம்பிக்கும் முன், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய உத்தரவிடப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்.
முன்னதாக, அமைச்சர் திங்கள்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA) பணிக்கான பயிற்சி அளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் பயிற்சிக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
school News