மத்திய அரசின் துறைகளில் Auditor, UDC, Accountant மற்றும் பல பணிகளுக்கான Combined Graduate Level (CGL) தேர்வுக்கு மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையிட்டிருந்தது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். SSC வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் Tier-I Examination (Computer Based Examination), Tier-II Examination (Computer Based Examination), Tier-III Examination (Descriptive), Tier-IV Examination (Data Entry Skill Test/ Computer Proficiency Test), Document Verification ஆகிய அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த தேர்வு முறைகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
பணிகள்: Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant/ Superintendent, Inspector, Assistant Enforcement Office, Sub Inspector, Divisional Accountant, Junior Statistical Officer, Statistical Investigator Grade-II, Auditor, Accountant/ Junior Accountant, Tax Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணியிடம்: இந்தியா முழுவதும்
தகுதி: இளநிலை பட்டம் (Bachelor’s degree) படித்திருந்தாலே சம்மந்தப்பட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Tier-I Examination (Computer Based Examination), Tier-II Examination (Computer Based Examination), Tier-III Examination (Descriptive), Tier-IV Examination (Data Entry Skill Test/ Computer Proficiency Test) மற்றும் Document Verification அடிப்படையில் தகுதிானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
ஆன்லைன் முறை கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.11.2019
ஆஃப்லைன் முறை கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29.11.2019
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2019