MBBS, PDS உள்ளிட்ட மருத்துவப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டிருப்பது போல், மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கும் பிரத்யேகமாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், வரும் 2020 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2020 நீட் தேர்வுக்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read This: இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு!மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு, மாணவர்கள் MBBS தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். Provisional MBBS தேர்ச்சிப் பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
NEET PG 2020 Application: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
NEET PG 2020 தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 21 ஆம் தேதி வரையில்விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். NEET PG 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளை ஒரு முறை முழுவதுமாக வாசித்துக் கொள்ளவும்.
Also Read this: 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள்: பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
NEET PG 2020 விண்ணப்பக்கட்டணம்:
முக்கிய நாட்கள்:
NEET PG 2020 அறிவிக்கை வெளியான நாள்: 1 நவம்பர் 2019
NEET PG 2020 விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள்: 1 நவம்பர் 2019
NEET PG 2020 விண்ணப்பப் பதிவு முடியும் நாள்: 21 நவம்பர் 2019
NEET PG 2020 தேர்வுகள் நடைபெறும் தேதி: 5 ஜனவரி 2020
NEET PG 2020 தேர்வு முடிவுகள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
Tags
NEET PG 2020