SBI Bankல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு.



எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் இன்று முதல் மாறியுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் எப்படி மாறியுள்ளன என்பது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கியான எஸ்பிஐ, ₹ 30 லட்சம் கோடிக்கு மேல் வைப்பு நிதிகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதத்தை நவம்பர் 1 முதல் 1 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.

சேமிப்பு கணக்கு எனவே இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் குறைவாக கிடைக்கும். இது தொடர்பாக முக்கிய விவரங்களை இப்போது பார்க்கலாம். எஸ்பிஐ வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருந்தால் இனி 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும்.

மாற்றம் இல்லை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்பு கணக்கில் பணம் வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. 3 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து உள்ளது.கட்டணம் குறைப்பு பண்டிகை காலங்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்மைகளை வழங்குவதற்காக கடந்த மாதம், எஸ்பிஐ தனது அடிப்படை செலவின நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) அனைத்து கடன்தார்களுக்கும் 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இதன்படி எம்.சி.எல்.ஆர் அக்டோபர் 10 முதல் 8.15 சதவீதத்திலிருந்து 8.05 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

வட்டி விகிதம் எஸ்பிஐ வங்கியில் 2 கோடிக்கும் குறைவாக பணம் வைத்துள்ளவர்களுக்கு அக்டோபர் 10 முதல் வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பது குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 7 முதல் 45 நாட்களுக்கு பணம் வைத்திருந்தால் 4.50 சதவீதம் வட்டி, 46 முதல் 179 நாட்கள் வைத்திருந்தால் 5.50 சதவீத வட்டி, 180 முதல் 210 நாட்கள் வைத்திருந்தால் 5.80 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.

6.25 சதவீத வட்டி 211 நாட்கள் முதுல் ஒரு வருடம் பணம் வைத்திருந்தால் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கும். ஒரு வருடம் முதல் இரண்டு வரும் என்றால் 6.4 சதவீத வட்டியும், 2 முதல் 3 வருடம் என்றால் 6.25 சதவீதமும், 3 முதல் 5 வருடம் என்றால் 6.25 சதவீதமும், 5 முதல் 10 சதவீதம் என்றால் 6.25 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.6 சதவீத வட்டி எஸ்பிஐ வங்கி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த பண வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 30 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 2 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகைக்கு முன்பு 6.30 சதவீதம் வட்டி வழங்கி வந்தது. இனி 6 சதவீதம் வட்டி தான் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post