- NEWS18
- LAST UPDATED: DECEMBER 27, 2019, 9:04 PM IST
பிரதமர் நரேந்திர மோடி வரும் வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் டெல்லியில் கலந்துரையாடும் பரிஷ்கா பி சார்ச்சா எனும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பிரத்தியேக யூடியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பார்ப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி முதல் தொடர்ந்து பொங்கல் விடுமுறை வருவதால் 16-ம் தேதி அன்று பிரதமரின் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் 12-ம் தேதியே சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகைக்காக செல்வார்கள் என்பதால், அந்த மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.