ஹெச்1பி விசா விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கா!

ஹெச்1பி விசா விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கா!

முதற்கட்ட விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் 20-ம் தேதி வரையில் பெறப்படும்.

ஹெச்1பி விசா விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கா!
ஹெச்1பி விசா வேண்டுவோருக்கான விண்ணப்பம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க குடியேற்ற நிறுவனம் அறிவித்துள்ளது.


ஹெச்1பி விசா என்பது அமெரிக்கா அல்லாதோருக்கான பணியிட குடியுரிமை அனுமதி விசா ஆகும். வெளிநாட்டைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் பணி செய்ய இது மிகவும் முக்கியமான விசா ஆகும். பெரும்பாலான இந்திய ஐடி ஊழியர்கள் ஹெச்1பி விசா மூலமாகவே அமெரிக்காவில் பணி செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

1பி விசா விண்ணப்பங்கள் எலெக்ட்ரானிக் முறையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்களுக்காக ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் 2021-ம் நிதியாண்டுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து 10 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.


முதற்கட்ட விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் 20-ம் தேதி வரையில் பெறப்படும். தேர்வு முறை எலெக்ட்ரானிக் விண்ணப்பங்களுக்குத் தேர்வுப்படும் சூழலில் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோர் மட்டுமே ஹெச்1பி விசாக்கான மனுவை ஏப்ரல் 1 முதல் அளிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

TRENDING NOW

Copyright © 2018 NEWS18.com — All rights reserved. NETWORK 18 SITESVisit Mobile Site

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post