வாங்க மறுக்கும் சிறு வியாபாரிகள்... ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதா...? உண்மை என்ன...?

News18 Tamil


வாங்க மறுக்கும் சிறு வியாபாரிகள்... ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதா...? உண்மை என்ன...?
3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டை, 2020 ஜனவரி முதல் மாற்ற முடியாது என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.


2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், சற்று சிரமம் இருந்தாலும் வரும் காலத்தில் இதற்கான பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த திட்டம் வெற்றியடையவில்லை என்றே பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


பரவும் தகவல்கள்

திதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டை கள்ளத்தனமாக அச்சடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்தே வந்தது. சமீபத்தில் பேசிய முன்னாள் நிதித் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், 2000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு 2000 ரூபாய் நோட்டுகளாக இருப்பதாகவும், அவை அதிகளவில் பதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


இதனால், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு வருமோ என்று மக்கள் அச்சமடைந்தனர். இது ஒருபக்கம் இருக்க, 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்தியது. இதனால், மக்களிடையே 2000 நோட்டை புழங்குவது குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, ஏ.டி.எம்.களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் குறைவாகவே கிடைக்கிறது.


பரவும் தகவல்கள்


இந்த நிலையில், சமீபத்தில் பலருக்கும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக ரூ.2000 நோட்டு டிசம்பர் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஜனவரி முதல் இந்த ரூபாய் நோட்டை மாற்ற முடியாது எனவே உடனடியாக உங்கள் கையில் இருக்கும் 2000 ரூபாயை வங்கியில் செலுத்தி மாற்றிவிடுங்கள் என்று அந்த தகவல் கூறுகிறது.


இந்த தகவல்கள் வைரலாக பரவும் நிலையில், கிராமப் புறங்களில் தற்போது 2000 ரூபாய் நோட்டை கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இதனால், பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.


இந்த தகவல்கள் உண்மையா? என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்கும் போது, 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடிப்பது குறைந்தது உண்மைதான். ஆனால், ஜனவரி முதல் அதனை மாற்ற முடியாது என்பதில் உண்மை இல்லை. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டை மதிப்பிழப்பு செய்யும் எந்த திட்டமும் தற்போது ரிசர்வ் வங்கி தரப்பில் இல்லை.


பொய்யான தகவல்களை நம்பி, வீணாக மக்கள் பதற்றமோ, அச்சமோ அடையத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post