வெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம்..! ஒரு வாரத்திற்கான உணவுப் பட்டியல் இதோ



இன்றைய நிலவரப்படி சென்னையில் வெங்காயத்தின் விலை கிலோ 130 ரூபாய். இதைக் கேட்கும்போதே கண் கலங்கும் நமக்கு இதை வாங்கி சமைப்பது எத்தனைக் குடும்பங்களுக்கு சாத்தியம்..? அதற்கு சிறந்த தீர்வு வெங்காயமே இல்லாமல் சமைப்பதுதான். அப்படி என்னவெல்லாம் சமைக்கலாம் என்று யோசனை சொல்கிறது இந்தக் கட்டுரை.

மோர்க் குழம்பு : மோர்க் குழம்பு வெங்காயமே இல்லாமல் தாளித்து சாப்பிட்டாலும் அற்புத சுவைதான். அதோடு கூடவே தேங்காய், காய்ந்த மிளகாய், உடைத்த கடலை இஞ்சி ஆகியவற்றை வதக்கி அரைத்து மோரில் கலந்து கொதிக்க வைத்து தாளித்து சாப்பிடலாம். வேலையும் சிம்பிளாக முடிந்துவிடும்.

புளி தொக்கு : புளித் தொக்கு என்றாலே புளிதான் மூலதனம் என்பது அறிந்ததே..! இதில் வெங்காயம் மட்டுமல்ல தக்காளி கூட தேவைப்படாது. எனவே புளிக்குழம்பு வைத்து சோற்றில் கிளறி சாப்பிடுவதும் அதற்கு பொருத்தமான சைட்டிஷும் அட்டகாசமாக இருக்கும்.

வெரைட்டி ரைஸ் : கேரட் சாதம், பீட்ரூட் சாதம், புதினா சாதம் என கிளரும்போது வெங்காயமும் வதக்குவோம். இனி வெங்காயமே இல்லாமல் சமைக்கலாம். அபடி செய்வதால் உணவின் சுவையும் குறையாது.

வெஜிடபிள் பிரியாணி : தற்போது வெங்காயம் இல்லாமலும் நிறைய வீடுகளில் வெஜிடபிள் பிரியாணி செய்கிறார்கள். யூடியூப்களிலும் அதற்கான வீடியோக்கள் நிறைய கிடைக்கின்றன. அது நிச்சயம் உங்களுக்கு உதவலாம். தக்காளி சாதமும் சமைக்கலாம்.

கீரைக் குழம்பு : கீரைக் குழம்பிலும் வெங்காயம் குறைவாகவே பயன்படுத்துவோம். அது கெட்டியாக இருப்பதால் வெங்காயம் போட்டாலும் தனித்துத் தெரியாது. அதற்கு வெங்காயமே இல்லாமல் கீரைக் குழம்பு வைக்கலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post