பொதுத் தேர்வு விபரங்களில் தவறு இருந்தால் நடவடிக்கை'

'பத்தாம் வகுப்பு மாணவர்கள் விபரம் சேகரிப்பில்,தவறுகள் இருந்தால், வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தேர்வு துறை எச்சரித்துள்ளது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டண விலக்குஇதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. முதற்கட்டமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெயர், மொபைல் போன் எண் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதேபோல், மாற்றுத் திறனாளிக்கான சலுகை, தேர்வு கட்டண விலக்கு கேட்டு, விண்ணப்பம் பெறும் பணிகளும் நடந்து வருகின்றன. பதிவேற்றம்இந்த பணிகளில், 10ம் வகுப்பு ஆசிரியர்கள், கடமை உணர்வுடன் செயல்பட்டு, மாணவர்களின் விபரத்தை சரியாக சேகரித்து, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.அதேபோல், மாணவர்கள் அளிக்கும் விபரங்களில், தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

இதற்கிடையில், மாணவர்கள் விபரம் சேகரிப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அரசு தேர்வு துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

மாணவர்கள் விபரங்களை, பிழைகள் இன்றி சேகரிக்க வேண்டும். வகுப்பாசிரியர் சேகரித்து தரும் தகவல்களை, தலைமை ஆசிரியர் சரிபார்த்து, தேர்வு துறையின்இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விபரங்களில், பிழைகள் இருப்பது தெரிய வந்தால், வகுப்பாசிரியர் மீதும், தலைமை ஆசிரியர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post