பாரத ஸ்டேட் வங்கியில் 8,000 எழுத்தர் நிலைப் பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) இந்தியா முழுவதும் காலியாக இருக்கும் எழுத்தர் (Clerks) நிலையிலான 8,000 Junior Associates - Customer Support & Sales பணியிடங்களுக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

காலியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியா முழுவதும் 18 வட்டங்களாகப் பிரித்துச் செயல்பட்டுவருகிறது. இந்த வட்டங்களில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதி ஆகியவை சென்னை வட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வங்கியின் 18 வட்டங்களிலும் வழக்கமான காலியிடங்களில் (Regular Vacancies) பொது – 3387, ஈடபிள்யூஎஸ் – 777, எஸ்சி – 1209, எஸ்டி – 713, ஓபிசி – 1784 என்று மொத்தம் 7,870 இடங்கள் இருக்கின்றன.

job
job

சண்டிகர் மற்றும் வடகிழக்கு வட்டங்களில் சிறப்பு ஆட்சேர்க்கைப் பிரிவில் (Special Recruitment Drive) பொது – 60, ஈடபிள்யூஎஸ் – 13, எஸ்சி – 5, எஸ்டி – 33, ஓபிசி – 19 என்று மொத்தம் 130 இடங்களும் இருக்கின்றன.

தவிர, நிலுவை இடங்களில் (Backlog Vacancies) எஸ்டி – 130, ஓபிசி – 4 இடங்கள் இருக்கின்றன.

இந்தப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு உள்ஒதுக்கீட்டு இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வழக்கமான காலியிடங்களில் பொது – 171, ஈடபிள்யூஎஸ் – 39, எஸ்சி – 74, எஸ்டி – 3, ஓபிசி – 106 என்று மொத்தம் 393 இடங்கள் இருக்கின்றன. பாண்டிச்சேரியில் பொது – 5, எஸ்சி -1, ஓபிசி – 1 என்று மொத்தம் 7 இடங்கள் இருக்கின்றன.

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

Also Read: இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்... பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-1-2020 அன்று 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-1-1992 முதல் 1-1-2000 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10, விதவை, விவாகரத்து பெற்றவர் மற்றும் மறுமணம் செய்துகொள்ளாமல் சட்டப்படி கணவரைப் பிரிந்து வாழ்பவர்கள் – 10 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 26-1-2020

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் https://bank.sbi/web/careers அல்லது https://sbi.co.in/web/careers/ எனும் இணையதளத்தில் `Recruitment of Junior Associates 2020' எனும் இணையப் பக்கத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்குக் கட்டணம் எதுவுமில்லை. மற்றவர்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் தகவல் தெரிவித்தல் கட்டணமாக ரூபாய் 750/- இணைய வழியில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 26-1-2020

job
job

தேர்வுமுறை:

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என்று இருவகையான இணையவழித் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கில மொழி, எண் திறன் மற்றும் பகுத்தறிவுத் திறன் எனும் மூன்று வகையான பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண்களுக்கும், முதன்மைத் தேர்வில் பொது / நிதி விழிப்புணர்வு (General / Financial Awareness), பொது ஆங்கிலம் (General English), அளவறிவதற்கான திறன் (Quantitative Aptitude), பகுத்தறிவுத் திறன் மற்றும் கணினித் திறன் (Reasoning Ability & Computer Aptitude) எனும் நான்கு பிரிவுகளில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கும் தேர்வெழுத வேண்டும். இரு தேர்வுகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கு, அவர்கள் பணியமர்த்தப்படும் அலுவலகப் பகுதிக்கேற்ற உள்ளூர் மொழித்திறன் அறிந்து பணியிடம் வழங்கப்படும்.

தேர்வு மையங்கள்:

இந்தத் தேர்வுகளில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் என்று 11 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இரு தேர்வுகளையும் எழுதமுடியும்.

தேர்வு நாள்:

முதல்நிலைத் தேர்வு 2020-ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம். அதன்பிறகு, முதன்மைத் தேர்வு 19-4-2020 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளிலும் முதன்மை மதிப்பெண் பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிட ஆணை வழங்கப்படும். இந்தப் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 11,765-655 / 3-13,730-815 / 3-16,175-980 / 4-20,095-1145 / 7-28,110-2120 / 1-30,230-1310 / 1-31,450 எனும் சம்பள ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

Also Read: விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 215 பணியிடங்கள்... BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://bank.sbi/web/careers அல்லது https://sbi.co.in/web/careers/ எனும் இணையதளங்களில் ஒன்றைப் பார்வையிடலாம்.

விண்ணப்பப்படிவம் நிரப்புவதில் சிக்கல், பணம் செலுத்துவதில் ஏற்படும் இடையூறுகள், அழைப்புக் கடிதம் கிடைக்காமலிருத்தல் போன்ற தொடர்புகளுக்கு http://cgrs.ibps.in/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post