குரல்வழி வங்கி சேவை அறிமுகம்: சிட்டி யூனியன் வங்கி

குரல்வழி வங்கி சேவை அறிமுகம்: சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி இந்தியாவிலேயே முதல்முறையாக குரல்வழி வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 1904 ல் தொடங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 650 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற 116-வது நிறுவன தின விழாவில் ‘சியூபி ஆல் இல் ஒன்’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 

அதில் புதிய அம்சமாக குரல்வழியில்  வங்கி  சேவையை வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.   இது போன்ற சேவையை இந்தியாவிலேயே வழங்கும் முதல் வங்கி என்ற பெருமையை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. 

செயலியின் உள்ளே வலது புறத்தின் கீழ் பகுதியில் குரல்வழி சேவையை பெறுவதற்கான ஐகான் இருக்கும்.  அதில் கிளிக் செய்து உள்ளே சென்றால் குரல்வழியில் நமக்கான தகவலை பேசி பெறமுடியும். 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும்  தெலுங்கு  ஆகிய 4 மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.  பணம் அனுப்புதல், வங்கி கணக்கில் இருக்கும் தொகை,  கடைசியாக மேற்கொண்ட பண பரிமாற்றங்கள் குறித்த தகவலை குரல்வழியில் பேசி உடனுக்குடன் பெற முடியும்.  

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post