இந்த சொந்த வீடு செண்டிமெண்டை உண்மையாக்க, எஸ்பிஐ வங்கியின் குறைந்த வட்டி விகித வீட்டுக் கடன்கள், உங்களுக்கு உதவுமா பாருங்களேன்..!
எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.80 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.15 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.80 + 0.15 = 7.95 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.80 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.40 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.80 + 0.40 = 8.20 சதவிகித வட்டிக்கு, 30 - 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.80 சதவிகிதத்துடன் 0.50 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.80 + 0.50 = 8.30 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்கள் வரும் . அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் கூடுதல் வட்டி பிரீமியமாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் கொஞ்சம் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஆனால் இந்த வசதி ஜாயிண்ட் கணக்குகளுக்கு உண்டா எனத் தெளிவுபடுத்தவில்லை எஸ் பி ஐ.
சமீர் என்பவர் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கப் போகிறார். இப்போது தன் சொந்த காசாக 6 லட்சம் ரூபாய் கொடுத்து, மீதம் 29 லட்சம் ரூபாயை கடன் வாங்குகிறார் என்றால், வீட்டின் மொத்த மதிப்பில் 82.8 சதவிகிதத்தை கடன் வாங்குகிறார் என்று பொருள். எனவே இவருக்கு 0.10 % வட்டி கூடுதலாக வட்டி விதிப்பார்கள்.