வருமான வரிச் சலுகைகள் படிப்படியாக நீக்கப்படும்! - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரித் தாக்கலில் சலுகை, கழிவுகள் இல்லாத வரித் தாக்கல் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு, வரிச் சலுகைகளுடன்கூடிய பழைய வரித்தாக்கல் முறையையும் நீக்காமல், இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளார்கள்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

புதிய வரித்தாக்கல் முறை, மாதச் சம்பளதாரர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அடுத்த நிதியாண்டிலேயே பழைய முறை நீக்கப்பட்டுவிடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.``வரிச் சலுகைகள், வரிக் கழிவுகளை முழுவதுமாக நீக்குவதற்கு எவ்வித கால வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போதுதான் மாற்று வரித் தாக்கல் முறையை சில சலுகைகளை நீக்கியும், சிலவற்றைச் சேர்த்தும் உருவாக்கியுள்ளோம். வரிச் சலுகைகள், வரிக் கழிவுகளை முற்றிலும் நீக்கிய, எளிமைப்படுத்தப்பட்ட வரித் தாக்கல் முறையைக் கொண்டுவருவதே எங்களுடைய இலக்கு என்றாலும், அதை அடைவதற்கு எவ்வித கால வரையறையும் செய்யப்படவில்லை. வரிச் சலுகைகளை எதிர்பார்க்காத மனநிலைக்கு படிப்படியாகக் கொண்டுசெல்வோம்" என்று தெரிவித்துள்ளார், நிதியமைச்சர்.

வரிச் சலுகை
வரிச் சலுகை

காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தும்முறை முதலில் கொண்டுவரப்பட்டது. பின்னர், மானியத்தொகை சிறிதுசிறிதாக குறைக்கப்பட்டுவருகிறது. இதேபோலத்தான், தனிநபர் வரித் தாக்கலிலும் சிறிதுசிறிதாக சலுகைகளை நீக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு செயல்படுவதாகத் தெரிகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post