உங்கள் விருப்பத்திற்கேற்ற படிப்புகள்ஜனவரி 05,2014,14:48 IST
கல்லூரி படிப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய காலம் முதல் பெரும்பான்மையோரால் விரும்பப்படும் படிப்புகளாக மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் படிப்புகள் போன்றவை உடனடியாக வேலை வாய்ப்பினையும், வருமானத்தையும் தரும் படிப்புகள் என ஆசிரியர், பெற்றோர், மாணவர்களால் கருதப்பட்டு, முக்கியத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த போக்கின் காரணமாக கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. குறிப்பிட்ட பாடங்களையே பலரும் தேர்ந்தெடுத்ததனால் பணி வாய்ப்பினை பெறுவதில் கடும் போட்டியும், படிப்புக்கேற்ற வேலை இன்மையும் அதிகரித்து வருகிறது. இது போன்ற நிலையை மாற்றக்கூடிய படிப்புகளாக தொழில் படிப்புகள் விளங்குகின்றன. தொழிற் படிப்புகளைப் பொறுத்த வரையில், இவற்றை குறைந்த காலத்தில் கற்று, விரைவாக பணம் சம்பாதிப்பதற்கு துணை புரிகிறது.
மேலும் விருப்பத்திற்கேற்ற துறையை எளிதாக தேர்ந்தெடுப்பதற்கும் எளிதானதாக தொழிற்கல்வி இருக்கிறது.
தொழிற் கல்வி
தொழிற் கல்வி
* திறனை அடிப்படையாகக் கொன்டு கற்றுத் தரப்படும்.
* செய்முறை மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* மாணவர்களை வேலைக்குத் தயார்படுத்துவதே முக்கிய நோக்கம்.
* சான்றிதழ் படிப்பாக கற்றுத்தரப்படும்பொழுது மதிப்பு குறைந்ததாக கருதப்படுகிறது.
தகுதி
சான்றிதழ் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பும், வேறு படிப்புகளுக்கு பிளஸ்2ம் படித்திருக்க வேண்டும்.
காலம்
பாடத்திட்டத்திற்கு ஏற்ப படிக்கும் காலம் மாறுபடும். குறைந்தது 2 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கற்றுத் தரப்படும்.
யார் தேர்ந்தெடுக்கலாம்?
* தங்களுடைய பொழுதுபோக்கே வேலையாக மாற்றம் பெற வேண்டும் என நினைப்பவர்கள்.
* வேலை தான் முக்கியம் என நினைப்பவர்கள்.
* குறைந்த காலத்தில் படிப்பை முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள்.
* சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள்.
பொதுக் கல்வித் திட்டம்
* கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கற்றுத் தரப்படும்.
* கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* தேர்ந்தெடுத்து படிக்கும் பாடங்களில் பரந்த அறிவை அளிக்கும் வகையில் இருக்கும்.
* மதிப்புமிகுந்ததாக கருதப்படுகிறது.
தகுதி
பட்டய படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பும், இளநிலை படிப்புகளுக்கு பிளஸ் 2ம் படித்திருக்க வேண்டும்.
காலம்
குறந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை படிக்க வேண்டியது இருக்கும்.
யார் தேர்ந்தெடுக்கலாம்?
* விரிந்த அறிவினை பெற வேண்டும் என நினைப்பவர்கள்.
* தங்கள் ஆர்வத்தை அடுத்தடுத்து வெளிப்படுத்த நினைப்பவர்கள்.
* திட்டமிடப்பட்ட கல்வியை பெற வேண்டும் என நினைப்பவர்கள்.
பயன்களும், பாதிப்புகளும்
* ஒரு குறிப்பிட்ட துறையில் ஆர்வத்துடன் செயல்பட துணை புரிகிறது.
ஆனால், இது ஒரு கூடுதல் இணைப்பு படிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.
ஆனால், இது ஒரு கூடுதல் இணைப்பு படிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.
* குறைந்த காலத்தில் படிக்கும் படிப்பாக இருக்கிறது.
ஆனால், சான்றிதழ் படிப்புகள் சிறந்த வேலையினைப் பெறுவதற்கு பெரும்பாலும் உதவுவதில்லை.
* கண்டிப்பான சேர்க்கை முறையை கொண்டிருப்பதில்லை.
ஆனால் பொதுக் கல்வியைப் பொறுத்த வரையில் பிளஸ் 2 கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.
* ஆன்-லைன் வழியாக சில தொழில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், இவை மரபு வழிப் படிப்புக்கு ஒரு போதும் இணையாகாது.
* மக்களிடையே தொழிற் படிப்புகள் தொழில் துவங்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆனால், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், ஒரு சில தொழிற்பயிற்சிகள் வழக்கொழிந்து விடுகின்றன.
சிறந்த தொழில் படிப்புகளில் சில
உணவக மேலாண்மை மற்றும் சுற்றுலா
உட்புற வடிவமைப்பு
அனிமேஷன்
திரைப்படம் மற்றும் ஊடகம்
அழகியல்
உட்புற வடிவமைப்பு
அனிமேஷன்
திரைப்படம் மற்றும் ஊடகம்
அழகியல்
Tags
News