குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1தேர்வு நடத்துகிறது.
அதன்படி தமிழகத்தில் துணை கலெக்டர்(காலி பணியிடம் 3), காவல்துறை துணை கண்காணிப்பாளர்(33), வணிகவரித்துறை இணை கமிஷனர்(33), ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர்(10) ஆகிய பதவிகளில் 79 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர்.எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 மையங்கள் என 560 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1மணி வரை நடக்கிறது.தேர்வு கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர், பறக்கும் படை அதிகாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு மையங்களை ஆய்வு செய்ய துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தொலை தூரங்களில் உள்ள தேர்வு கூடம் மற்றும் பதற்றம் உள்ளவை என கண்டறியப்பட்டுள்ள தேர்வு கூடங்கள் அனைத்தும் ‘வெப் கேமரா’ மூலம் நேரடியாக தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மற்ற தேர்வு கூடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு கூடங்கள் அமைந்துள்ள இடங்கள் வழியாக செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Pos
Tags
kalvi news