மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தையொட்டிய சுற்றுப்பாதைக்குள் விண்கலம் செலுத்தப்பட்ட பிறகு, அதிலுள்ள மார்ஸ் கலர் கேமரா காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மங்கள்யானின் வெற்றிக்குப் பிறகு "தினமணி' நிருபரிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது:
விண்கலத்தை செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான கட்டளைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக செயல்படுத்தப்பட்டன. இதனால், எந்தவிதச் சிக்கலும் இன்றி மங்கள்யான் செவ்வாய் கிரகத்தையொட்டிய சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது.
விண்கலத்திலிருந்து வந்த சிக்னல்கள் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா, அமெரிக்காவின் கோல்டு ஸ்டோன் ஆகிய இடங்களில் உள்ள தொலை தூர கட்டுப்பாட்டு மையங்களில் பெறப்பட்டன. அதைவைத்தே விண்கலம் திட்டமிட்டப் பாதையில் சென்றது உறுதிசெய்யப்பட்டது. அந்த மையங்களில் சிக்னல்கள் பெறப்பட்ட அந்த நேரத்திலேயே பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல்கள் அனுப்பப்பட்டன.
விண்கலத்தில் உள்ள மார்ஸ் கலர் கேமரா இயங்கத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களும் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஓரிரு தினங்களில் முடிவு: விண்கலம் செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் சீராக இயங்கத் தொடங்கியவுடன், அதிலுள்ள கருவிகளை எந்த வரிசையில் இயக்குவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். இந்தக் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் இஸ்ரோவின் விண்வெளி தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் அவை ஆய்வு செய்யப்படும்.
அமெரிக்காவின் மேவன் விண்கலத்துடன் ஒப்பிடும்போது மங்கள்யான் விண்கலம் வேறுபட்டது. இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேவன் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேற்பரப்பை மட்டுமே ஆய்வு செய்யும் நோக்கத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா முதல்முறையாக அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதி, வளிமண்டலம் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்யும் என அவர்கள் தெரிவித்தனர்.
நாடே பெருமைப்படும் சாதனை: குடியரசுத் தலைவர்
செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோ) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு அவர் புதன்கிழமை அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
சுமார் 9 மாதப் பயணத்துக்குப் பிறகு மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதையில் செலுத்தியதற்காக எனது இதயப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் சிவப்புக் கோளான செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பும் முதல் ஆசிய நாடாக இந்தியாவும், உலக அளவில நான்காவது விண்வெளி ஆய்வு அமைப்பாக இஸ்ரோவும் உருவெடுத்துள்ளன.
மேலும், செவ்வாயின் சுற்றுப் பாதையில் விண்கலத்தை முதல் முயற்சியிலேயே செலுத்தியுள்ள முதல் அமைப்பும் இஸ்ரோதான். இந்தியாவின் விண்வெளி சார்ந்த திறனை வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்த வரலாற்றுச் சாதனைக்காக நாடே பெருமைப்படுகிறது.
நமது விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாதனையானது, மேலும் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க நமது விஞ்ஞானிகளுக்குத் தூண்டுகோலாக இருக்கும். உங்கள் (ராதாகிருஷ்ணன்) குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களது கடின உழைப்புக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி.யின் 25-வது ராக்கெட்டில் கிடைத்த வெற்றி
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கான விண்கலத்தை எடுத்துச் சென்ற பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் 25-வது ராக்கெட் ஆகும். இதில் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகச் சுற்றுப் பாதையை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
முதன் முதலாக கடந்த 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ஐ.ஆர்.எஸ். 1-இ செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் மட்டுமே தோல்வியடைந்தது. அதன்பிறகு, 4-வது பி.எஸ்.எல்.வி. திட்டமான சி-1 ராக்கெட் பாதியளவு வெற்றிமட்டுமே அடைந்தது. அதாவது ராக்கெட்டின் 4-வது நிலை சரியாக செயல்படாததால் திட்டமிட்ட பாதையில் ஐஆர்எஸ் 1-டி செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியவில்லை. மற்ற அனைத்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும் செயற்கைக்கோள்களை மிகத் துல்லியமாக திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தியுள்ளன.
"தொடர்பில் இரு, அருகிலேயே இருக்கிறேன்'
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி விண்கலக் குழுவினர் மங்கள்யான் விண்கலத்துக்கு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்களது வாழ்த்துச் செய்தியில், "நமஸ்தே! இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக விண்கலமான மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்துகள்' எனத் தெரிவித்தனர்.
அதற்கு மங்கள்யான் குழுவினர் உடனடியாக, "எப்படியிருக்கிறாய், தொடர்பில் இரு. நான் அருகிலேயே இருக்கிறேன்' எனப் பதிலளித்தனர்.
மங்கள்யானில் உள்ள கருவிகள்
லிமான் ஆல்பா போட்டோமீட்டர்
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான கருவி. செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் கதிர்வீச்சில் டுடீரியம் (ஈங்ன்ற்ங்ழ்ண்ன்ம்), ஹைட்ரஜன் அளவை இந்தக் கருவி கணக்கிடும். இந்த அளவைக் கணக்கிடுவதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எவ்வாறு இல்லாமல் போனது அல்லது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை அறியலாம்.
மீத்தேன் சென்சார் ஃபார் மார்ஸ்
செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளதா, அது எதிலிருந்து உருவானது என்பதைக் கண்டறிவதற்கான கருவி. நூறு கோடி துகள்களில் ஒரு துகளை அளவிடும் துல்லியமான கருவிகள் இதில் உண்டு. செவ்வாய் கிரகத்திலிருந்து பிரதிபலிக்கும் சூரிய கதிர்வீச்சைக் கொண்டு இது தகவல்களைச் சேகரிக்கும்.
மார்ஸ் எக்சாஸ்பெரிக் நியூட்ரல் கம்போசிஷன் அனலைசர்
செவ்வாய் கிரக வளிமண்டல மேல் அடுக்கை சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திலிருந்து இந்தக் கருவி ஆராயும்.
மார்ஸ் கலர் கேமரா
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு எவ்வாறு உள்ளது, வானிலை எப்படி உள்ளது என்பதை இந்தக் கேமராவில் படம் பிடிக்கலாம். அதோடு, செவ்வாயின் துணைக்கோள்களான போபோஸ், டெய்மோஸ் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.
செவ்வாய் கிரகம்
வளிமண்டலம் (வாயுக்களின் அடக்கம்)
நைட்ரஜன் 2.7%
ஆக்சிஜன் 0.13%
ஆர்கான் 1.6%
கார்பன்-டை ஆக்ûஸடு 95.32%
நீராவி 0.03%
நைட்ரிக் அமிலம் 0.01%
வளிமண்டல அழுத்தம்
7.5 மில்லிபார் (சராசரி)
நாளின் அளவு
24 மணி நேரம் 37 நிமிஷம்
ஆண்டின் அளவு
687 நாள்கள்
துருவப் பகுதிகள்
கார்பன்-டை-ஆக்ûஸடு மற்றும்
நீர் பனிக்கட்டிகள்
மேற்பரப்பு வெப்பநிலை
- 63 டிகிரி செல்சியஸ்
துணைக்கோள்கள்
2 (போபோஸ், டெய்மோஸ்)
சாய்வு
25 டிகிரி
ஆழமான பள்ளம்
வாலஸ் மேரினரிஸ்
7 கிலோமீட்டர் ஆழம்
சூரியனிலிருந்து தொலைவு (சராசரி)
22 கோடியே 79 லட்சத்து
36 ஆயிரத்து 637 கிலோமீட்டர்
ஈர்ப்பு விசை
புவியீர்ப்பு விசையில் 0.375 பங்கு
மிகப்பெரிய எரிமலை
ஒலிம்பஸ் மன்ஸ்
26 கிலோமீட்டர் உயரம்
602 கிலோமீட்டர் விட்டம்
தண்ணீர் ஹ
ஒரு காலத்தில் தண்ணீர் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. இப்போது தண்ணீர் மேற்பரப்புக்கு உள்ளே இருக்கலாம் என நம்பப்படுகிறது. துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்தும் காணப்படுகிறது.
செவ்வாய்க்கு இதுவரை அனுப்பப்பட்ட விண்கலங்கள்
1எம் எண்.1 அக்டோபர் 10, 1960 சோவியத் ரஷியா தோல்வி
1எம் எண்.2 அக்டோபர் 14, 1960 சோவியத் ரஷியா தோல்வி
2எம்வி-4 எண்.1 அக்டோபர் 24, 1962 சோவியத் ரஷியா தோல்வி
மார்ஸ் 1 நவம்பர் 1, 1962 சோவியத் ரஷியா தோல்வி
2எம்வி-3 எண்.1 நவம்பர் 4, 1962 சோவியத் ரஷியா தோல்வி
மரைனர் 3 நவம்பர் 5, 1964 அமெரிக்கா தோல்வி
மரைனர் 4 நவம்பர் 28, 1964 அமெரிக்கா வெற்றி
úஸான்ட் 2 நவம்பர் 30, 1964 சோவியத் ரஷியா தோல்வி
மரைனர் 6 பிப்ரவரி 25, 1969 அமெரிக்கா வெற்றி
2எம் எண்.521 மார்ச் 27, 1969 சோவியத் ரஷியா தோல்வி
மரைனர் 7 மார்ச் 27, 1969 அமெரிக்கா வெற்றி
2எம் எண்.522 ஏப்ரல் 2, 1969 சோவியத் ரஷியா தோல்வி
மரைனர் 8 மே 9, 1971 அமெரிக்கா தோல்வி
காஸ்மோஸ் 419 மே 10, 1971 சோவியத் ரஷியா தோல்வி
மரைனர் 9 மே 30, 1971 அமெரிக்கா வெற்றி
மார்ஸ் 2 மே 19, 1971 சோவியத் ரஷியா வெற்றி
மார்ஸ் 2 லேண்டர் மே 19, 1971 சோவியத் ரஷியா தோல்வி
மார்ஸ் 3 மே 28, 1971 சோவியத் ரஷியா வெற்றி
மார்ஸ் 3 லேண்டர் மே 28, 1971 சோவியத் ரஷியா தோல்வி
மார்ஸ் 4 ஜூலை 21, 1973 சோவியத் ரஷியா தோல்வி
மார்ஸ் 5 ஜூலை 25, 1973 சோவியத் ரஷியா தோல்வி
மார்ஸ் 6 ஆகஸ்ட் 5, 1973 சோவியத் ரஷியா தோல்வி
மார்ஸ் 7 ஆகஸ்ட் 9, 1973 சோவியத் ரஷியா தோல்வி
வைகிங் 1 ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
வைகிங் 1 லேண்டர் ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
வைகிங் 2 செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
வைகிங் 2 லேண்டர் செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
ஃபோபாஸ் 1 ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா தோல்வி
ஃபோபாஸ் 2 ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா பகுதியளவு தோல்வி
மார்ஸ் அப்சர்வர் செப்டம்பர் 25, 1992 அமெரிக்கா தோல்வி
மார்ஸ் குளோபல் சர்வேயர் நவம்பர் 7, 1996 அமெரிக்கா வெற்றி
மார்ஸ் 96 நவம்பர் 16, 1996 ரஷியா தோல்வி
மார்ஸ் பாத்ஃபைன்டர் டிசம்பர் 4, 1996 அமெரிக்கா வெற்றி
நசோமி ஜூலை 3, 1998 ஜப்பான் தோல்வி
மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் டிசம்பர் 11, 1998 அமெரிக்கா தோல்வி
மார்ஸ் போலார் லேண்டர் ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
டீப் ஸ்பேஸ் 2 ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
மார்ஸ் ஒடிசி ஏப்ரல் 7, 2001 அமெரிக்கா வெற்றி
மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 2, 2003 ஐரோப்பிய
விண்வெளி அமைப்பு வெற்றி
பீகிள் 2 ஜூன் 2, 2003 ஐரோப்பிய
விண்வெளி அமைப்பு தோல்வி
ஸ்பிரிட் ஜூன் 10, 2003 அமெரிக்கா வெற்றி
ஆப்பர்ச்சூனிட்டி ஜூலை 8, 2003 அமெரிக்கா வெற்றி
ரொசட்டா மார்ச் 2, 2004 ஐரோப்பிய
விண்வெளி அமைப்பு வெற்றி
எம்ஆர்ஓ ஆகஸ்ட் 12, 2005 அமெரிக்கா வெற்றி
பீனிக்ஸ் ஆகஸ்ட் 4, 2007 அமெரிக்கா வெற்றி
டான் செப்டம்பர் 27, 2007 அமெரிக்கா வெற்றி
ஃபோபாஸ் கிரண்ட் நவம்பர் 8, 2011 ரஷியா தோல்வி
யிங்கோ-1 நவம்பர் 8, 2011 சீனா தோல்வி
கியூரியாசிட்டி நவம்பர் 26, 2011 அமெரிக்கா வெற்றி
மங்கள்யான் நவம்பர் 5, 2013 இந்தியா வெற்றி
மேவன் நவம்பர் 18, 2013 அமெரிக்கா வெற்றி
இதில் ரொசட்டா, டான் ஆகிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவில்லை. எனவே, அவற்றின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளன.
இந்தியாவின் மங்கள்யான்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2013, நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது
திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு, கனிம வளம், வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
ஆய்வுக் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்கள்
66 கோடி கிலோமீட்டர் பயணம்
18 மாதங்களில் உருவாக்கப்பட்டது
விண்கலத்தின் எடை 1,337 கிலோ
விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 15 கிலோ
செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை 2014, செப்டம்பர் 24-இல் அடைந்தது
அமெரிக்காவின் மேவன்
ஃப்ளோரிடாவின் கேப் கேன்னிவரல் விமானப்படை ஏவுதளத்தில் இருந்து 2013, நவம்பர் 18-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது
ரூ.4,083 கோடி
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேல் அடுக்கை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
முதன்மையான ஆய்வுக் காலம் ஓர் ஆண்டு. பிறகு, 29 மாதங்களுக்கும், மிக அதிக உயரத்திலான சுற்றுப்பாதையில் 6 ஆண்டுகள்
71 கோடி கிலோமீட்டர் பயணம்
5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது
2,454 கிலோ
65 கிலோ
2014, செப்டம்பர் 21-ஆம் தேதி சுற்றுப்பாதையை அடைந்ததுவரையும் இயங்கும்
Tags
Latest News