தமிழக மருத்துவ கல்லுாரிகளில் நீட் நுழைவு தேர்வு வாயிலாக போலி மாணவர்கள் சேர்ந்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள மாதா மருத்துவ கல்லுாரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் 41 மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதினர்.
அப்போது புத்தகங்களை பார்த்து மாணவர்கள் காப்பி அடித்தது மருத்துவ பல்கலையின் தேர்வு ஒழுங்கு குழுவினரின் விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு தேர்வறை கண்காணிப்பாளர்கள் முறைகேடாக உதவியதும் தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில் மாதா மருத்துவ கல்லுாரியை சேர்ந்த 41 மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என பல்கலை அறிவித்துள்ளது. மேலும் மாதா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தேர்வு நடத்த மூன்றாண்டும் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தேர்வு நடத்த இரண்டாண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது