ஆசிரியர் பணித் தேர்வுகளுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு!

ஆசிரியர் பணித் தேர்வுகளுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு!
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடப்பாண்டில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலருக்கான தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர்களைத் தேர்வு செய்ய மே 2 மற்றும் 3-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


497 முதுகலை ஆசிரியர் பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை ஜூலை ஒன்றாம் தேதியும், 730 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை ஜூலை 9ம் தேதியும் வெளியிடப்படும். மேலும், 572 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை ஜூலை 17ம் தேதி வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post